உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சத்திரத்தில் முத்தாலம்மன் கோவில் செடல் உற்சவம்

புதுச்சத்திரத்தில் முத்தாலம்மன் கோவில் செடல் உற்சவம்

புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி முத்தாலம்மன் கோவிலில் செடல் உற்சவம்  நடந்தது.விழா கடந்த 16 ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.  

அன்று மதியம் 2.00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து, அம்மனுக்கு சிறப்பு  ஆராதனை நடந்தது. செடல் உற்சவம் 20 தேதி நடந்தது.காலை 10.00 மணிக்கு  அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மதியம் 2.00 மணிக்கு பால்குடம்  ஊர்வலம், மாலை 6.00 மணிக்கு செடல் உற்சவம், இரவு அம்மன் வீதியுலா  நடந்தது. 21 ம் தேதி சாகை வார்த்தல், மாலை 4.00 மணிக்கு மஞ்சள்நீர்  விளையாட்டு விழா நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !