திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் தூய்மைப்பணி
ADDED :2265 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையிலுள்ள கழிவுநீர் கால்வாய்களில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு துாய்மை பணி நடந்தது.
பஸ் ஸ்டாண்ட் முதல் கிரிவலப் பாதையில் 2 கி.மீ., துாரத்திற்கு கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாயின் பல இடங்களில் வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் இருந்தன.
பல இடங்களில் குப்பையால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. கால்வாய்க்குள் மூன்றரை அடி உயரத்திற்குமணல் மேவியிருந்தது.இதனால் கழிவுநீர் ரோட்டில் சென்றது.மாநகராட்சி உதவி பொறியாளர் முருகன் தலைமையில் ஊழியர்கள் இரு நாட்களாக கால்வாய் ஆக்கிரமிப்பு களை அகற்றி துாய்மை பணியிலும் ஈடுபட்டனர்.