உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஸ்ரீவியாசராஜர் பிருந்தாவனம் சேதம்: பக்தர்கள் கண்டனம்

திருப்பூர் ஸ்ரீவியாசராஜர் பிருந்தாவனம் சேதம்: பக்தர்கள் கண்டனம்

திருப்பூர்:கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம் ஆனேகுந்தியில் துங்கபத்ரை  ஆற்றின் நடுவில் ஸ்ரீ வியாசராஜரின் பிருந்தாவனம் உள்ளது.மாத்வ குரு  பரம்பரையில் அவதரித்த ஒன்பது மாத்வ ஆசார்யார்களின் பிருந்தாவனங்களே,  நவ பிருந்தாவனங்கள் என்று அழைக்கப்பட்டு பக்தர் களால் புனிதமானதாக  போற்றப்படுகிறது. வியாசராஜரின் பிருந்தாவனம், கடந்த 17ம் தேதி இரவு,  விஷமிகளால், முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது.

இதைக்  கண்டித்து, திருப்பூர் மாத்வா மஹா சபை மற்றும் ஸ்ரீ வியாசராஜர் சுவாமிகள், ஸ்ரீ  ராகவேந்திராசாமி பக்தர்கள் கண்டனம் தெரிவித்து திருப்பூர் பார்க் ரோட்டில்  கூட்டம் நடத்தினர்.
இதில், ஸ்ரீ வியாசராஜர் சுவாமிகளின் மடத்தின் திருப்பூர் பிரதிநிதிகள் ரமேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் ராகவேந்திர சேவா சங்கத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !