உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையை பறைசாற்றும்.. வீரசோழீஸ்வரர் கோவில்

பழமையை பறைசாற்றும்.. வீரசோழீஸ்வரர் கோவில்

கொழுமம்: ஒன்பதாம் நுாற்றாண்டில், மூன்றாம் வீரசோழன் (1168 - 1196) ஆட்சியில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றங்கரையிலுள்ள, கொழுமத்தில் வீரசோழீஸ்வரர் கோவில் கற்றளி முறையில் கட்டப்பட்டது.சிவபெருமான், நடராஜராக நடனம் ஆடும் ஸ்தலமாக உள்ளதால், தாண்டேசுவரர் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது.

சிவகாமி அம்மனுடன் சிவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.முன் மண்டப மேற்கூரை, 20க்கும் மேற்பட்ட துாண்கள் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு துாணும், ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. கருவறை, இரக்கட்டு மண்டபம், அர்த்தமண்டபம் உள்ளன.மன்னர் ஆட்சியில், கோவிலுக்கு வழங்கிய தானங்கள் வாழ்க்கை முறை குறித்த கல்வெட்டுக்கள் கோவில் சுவர்களில் காணப்படுகிறது. மூன்றாம் வீரசோழனுக்கு பின், பட்டத்துக்கு வந்த வீரராஜேந்திரன் (1207 - 1256) விஸ்தரிப்பு பணியில் ஈடுபட்டு, மகா மண்டபமும், நித்தம் நின்றாடுவார் மண்டபம் கட்டினார். ஆயிரம் ஆண்டுகள் கடந்து கம்பீரமாக காட்சி தரும் கோவிலில், தினசரி பூஜைகள் நடக்கிறது. ஆண்டுதோறும், சிவகாமி உடனமர் தாண்டேசுவரர் திருக்கல்யாணம் முக்கிய நிகழ்ச்சியாகும்.வளாகத்தில் விநாயகர், முருகன், ஐயப்பன், நவக்கிரகம், காலபைரவர், ஆஞ்சிநேயருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !