உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி அய்யனார் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி அய்யனார் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி: மேல்பாப்பாம்பாடி அய்யனாரப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி அடுத்த மேல்பாப்பாம்பாடியில் உள்ள செல்வ கணபதி, பூரணி, புஷ்கலா சமேத அய்யனாரப்பன், சப்த கன்னிகளுக்கு திருப்பணிகள் செய்து நேற்று ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.

அதனையொட்டி, கடந்த 21ம் தேதி மாலை 6:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, ஆலய சுத்தி, வாஸ்து பூஜை, அஷ்ட திக் பாலகர் பூஜையும், இரவு 7:00 மணிக்கு கலச ஸ்தாபனமும், 8:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி பூஜையும், தொடர்ந்து அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், கோ பூஜையும் 9:00 மணிக்கு பிரதான பூஜையும், 9:30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும் தொடர்ந்து கடம் புறப்பாடாகி 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. ஏற்பாடுகளை மேல்பாப்பாம்பாடி கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !