உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ’பாதுகாப்பு கோட்டையாக இருப்பவள் தாய் மட்டுமே’

’பாதுகாப்பு கோட்டையாக இருப்பவள் தாய் மட்டுமே’

கோவை:கோவை ராம்நகர், ஐயப்பன் பூஜா சங்கத்தில், ஆடி உற்சவத்தின் ஆறாம் நாள் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.’ஸ்ரீ லட்சுமி அஸ்டோத்தரம்’ என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் பேசுகையில், ”எவன் ஒருவன் யாகம் செய்ய முடியுமோ, அவனே உண்மையான பதி எனப்படுவார். அவருக்கு யாகம் செய்ய உறுதுணையாக இருப்பவளே பத்தினி. பத்தினி இல்லாதவர் அக்னியை தொடக்கூடாது. ஒரு குழந்தை தவறு செய்தால், அதற்கு தன் கணவன் தண்டிக்கும் முன், குழந்தைக்கும், கணவனுக்கும் இடையே நின்று பாதுகாப்பு கோட்டையாக இருப்பவள் தாய் மட்டுமே. ஏழ்மை என்பது, பணத்தில் மட்டுமல்ல, புத்தி, எண்ணத்திலும் உண்டு. அந்த அனைத்து ஏழ்மையையும் போக்குபவள், மகாலட்சுமி ஆவார்,” என்றார்.ஆடி உற்சவ நிகழ்ச்சியில் ’ஸ்ரீ லட்சுமி அஸ்டோத்தரம்’ என்ற தலைப்பில் நடந்த சொற்பொழிவு நேற்றுடன் (ஜூலை., 22ல்)நிறைவடைந்தது. இன்று 23ம் தேதி முதல், வரும், 15ம் தேதி வரை, ’பாகவத ஏகாதச ஸ்கந்தம்’ என்ற தலைப்பில், ஸ்ரீ ராஜாராமன் சொற்பொழிவாற்ற உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !