உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி மாதத்தில் கோவில்களுக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆடி மாதத்தில் கோவில்களுக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ஆடி மாதத்தை முன்னிட்டு வழிபாட்டு தலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஆடி மாதம் அம்மன் கோவில் களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். குறிப்பாக, ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோவில் களில் பக்தர் கூட்டம் அதிகம் இருக்கும்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ஆடி வெள்ளிகளில் அதிக கூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆடி வெள்ளிகளில், ஐந்து சிறப்பு பஸ்கள், ஆடி அமாவாசையன்று, 10 சிறப்பு பஸ்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆனைமலைக்கு இயக்கப்படுகின்றன.ஆடி பெருக்கு பண்டிகையன்று, ஆழியாறு மற்றும் மாசாணியம்மன் கோவிலுக்கு, 10 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. பயணிகளின் எண்ணிக்கையை பொருத்து, பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !