பரங்கிப்பேட்டை அருகே துறவி லட்சுமிபாய் கோவிலில் கும்பாபிஷேகம்
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே ஓங்கார ஆசிரமம், துறவி லட்சுமிபாய் கோவிலில், நாளை (ஜூலை., 24ல்), கும்பிஷேகம் நடக்கிறது.
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், ஓங்கார ஆசிரமம், பூஜ்ய ஸ்ரீ மகரிஷி பிரணவகுமாரி என்கிற துறவி லட்சுமிபாய் கோவிலில், நாளை (ஜூலை., 24ல்), காலை கும்பாபிஷேக விழா நடக்கிறது. சுவாமி ஓங்காரநந்தா சுவாமி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். விழாவை யொட்டி, நேற்று முன்தினம் (ஜூலை., 21ல்), நடந்த மகா கணபதி ஹோமத்தை, மயிலாடு துறை எம்.பி., ராமலிங்கம் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து முதல், 2ம் மற்றும் 3ம் கால பூஜைகள் நடந்தது.தொடர்ந்து நாளை, (ஜூலை., 24ல்), ஆறாம் கால பூஜை, கடம் புறப்பாடாகி, அதிகாலை 3;00 மணி முதல் 4:30 மணிக்குள், கும்பாபி ஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, சுவாமி கோடீஸ்வரானந்தா, குமார் ராகவன், விஜய ராகவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.