திருவாடானையில் ஆடிப்பூரத்திருவிழா துவக்கம்
ADDED :2269 days ago
திருவாடானை : திருவாடானையில் சிநேகவல்லிஅம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத்திருவிழா நாளை 24ம் தேதி மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது.மறுநாள் 26ம் தேதி காலை 9:30 மணிக்கு கொடியேற்றமும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆக.2ல் தேரோட்டமும் நடைபெறும்.
மறுநாள் யாக கும்பாபிஷேகமும், 4 ல் அம்பாள் தவசும், மறுநாள் திருக்கல்யாணமும், 7 ல் சுந்தரர் கயிலாய காட்சியும் நடைபெறும்.தினமும் இரவு 8:00 மணிக்கு சிநேகவல்லிஅம்மன் வீதி உலா நடைபெறும். விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.