வாலிநோக்கம் ஆடி 18ம் பெருக்கில் 1,008 சுமங்கலி பூஜை
ADDED :2269 days ago
வாலிநோக்கம் : மாரியூரில் பவளநிறவல்லி அம்மன் சமேத பூவேந்தியநாதர் கோயில் பழமையும், புரதான சிறப்பினையும் பெற்றதாக விளங்குகிறது.
கோயிலுக்கு அருகே எழில்மிகுந்த மாரியூர் கடற்கரை அமைந்துள்ளதால் நாள்தோறும் ஏராள மான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில்ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18ம் பெருக்கு தினத்தன்று விவேகானந் தா கேந்திரத்தின் சார்பில் 1008 சுமங்கலி பூஜைகள் நடக்கும்.வருகிற ஆக. 3 (சனிக்கிழமை)அன்று காலை 6 மணிக்கு கோமாதா பூஜையும்,108 சங்காபிஷேகமும்,காலை 10:30 மணிக்கு கோயில் வளாகத்தில்சுமங்கலி பூஜைகளும் விமரிசையாக நடக்க உள்ளது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதானக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.