உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி வீரபத்திர சுவாமி கோவில் திருவிழா

கிருஷ்ணகிரி வீரபத்திர சுவாமி கோவில் திருவிழா

கிருஷ்ணகிரி: வீரபத்திர சுவாமி கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி: வீரபத்திர சுவாமி கோவில் திருவிழாவில், பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் பசவண்ணகோவில் அருகில், வீரபத்திர சுவாமி கோவில் திருவிழா நேற்று (ஜூலை., 23ல்) நடந்தது.

இதில், மேல்சோமார்பேட்டை, கனக முட்லு, பெரியமுத்தூர் உட்பட, 13 கிராமங்களை சேர்ந்த குரும்பர் இன மக்கள் 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோவில் வளாகத்தில், இரவு முழுவதும் பஜனை பாடல் நடந்தது. நேற்று (ஜூலை., 23ல்) காலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

அத்துடன் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த வந்த பக்தர்கள் தலையில், பூசாரி தேங்காய் களை உடைத்தார். பெண்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமண தடை நீக்க வேண்டும் என்றும், வியாதிகள் தீரவும் மடிப்பிச்சை எடுத்தனர். கோவில் வளாகத்தில் குப்புற படுத்துக்கொண்ட பெண்கள் மீது, பூசாரி நடந்து சென்று, அருள் வாக்கு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !