கிருஷ்ணகிரி அருகே வேல்முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் மாங்கனிமலை, வேல்முருகன் வள்ளி தேவசேனா சமேத கோவிலில், 50ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா நேற்று (ஜூலை., 22ல்) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இன்று (ஜூலை., 23ல்) காலை சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள், அபிஷேகம், சந்தனக்காப்பு உள்ளிட்ட பூஜைகள் நடக்க உள்ளன.
25 இரவு, 7:00 மணிக்கு, வேல்முருகன் பூ பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு நகர்வலம் வருதல், சிலம்பாட்டம், காவடி ஆட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம் ஆகியவை நடக்கிறது. சந்தூர் மாரியம்மன் கோவில் அருகில், 26 காலை 7:00 மணிக்கு, வீரபத்திர சுவாமி பக்தர்களின் சேவ ஆட்டமும், பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைத்தலும் நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு, பக்தர்கள் அலகு குத்தும் நிகழ்ச்சியும், 27 காலை, 10:30 மணிக்கு, முருகன் வள்ளி தேவசேன சமூக திருக்கல்யாணமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர்மக்களும், அறநிலையத்துறை யினரும் செய்துள்ளனர்.