உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் நவீன முறையில் 2 வது ரோப் கார்!

பழநி கோயிலில் நவீன முறையில் 2 வது ரோப் கார்!

பழநி: பழநி கோயிலில் இரண்டாவது "ரோப் கார் அமைப்பதற்கான ஆய்வு பணிகளை, ஆஸ்திரிய நாட்டு நிறுவனத்தினர் மேற்கொள்வர், என, அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: இரண்டாம் "ரோப் கார் நவீன முறையில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வுப்பணியை ஆஸ்திரிய நிறுவனத்தினர் மேற்கொள்வர். நிதி ஆதாரங்களை பொறுத்து, அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்படும். பழநி மாரியம்மன் கோயிலில், 38 லட்ச ரூபாயில் தேர் செய்யப்பட உள்ளது. கோயில் அறங்காவலர் குழு நியமனம், காலி பணியிடங்கள் நிரப்புவது உள்ளிட்டவை விரைவில் மேற்கொள்ளப்படும். கோயில் ஊழியர்களின் ஓய்வூதியம் உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது, என்றார். கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !