உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் மார்ச் 27ல் பங்குனி கொடியேற்றம்!

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் மார்ச் 27ல் பங்குனி கொடியேற்றம்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர பெருவிழா மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று பக்தர்கள் காலை 7.30 முதல் 8.30 மணிக்குள் காப்பு கட்டி விரதத்தை துவங்குகின்றனர். தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் சிறப்பு அபிஷேங்களும், ஆராதனைகளும் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுகளும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர விழா ஏப்.,5ல் நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு நொச்சிவயல் ஊரணிக்கரை பிரம்மபுரீஸ்வரர் கோயிலை அடையும். காலை 10.30 மணிக்கு மேல் அங்கிருந்து பால்குடம், பால்காவடி, அலகு குத்தி புறப்பட்டு ஊர்வலமாக பகல் 12.30 மணிக்கு கோயிலை அடைவர். பின் முருகனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடக்கிறது. அன்றிரவு 7.45க்கு கோயில் முன் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர்.

மாரியம்மன் பூக்குழி விழா: ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழி விழா மார்ச் 27ல் காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. ஏப்.,6ல் பூக்குழி உற்சவம், அன்றிரவு 10.30க்கு அம்பாள் பூக்குழி இறங்கும் விழா நடக்கிறது. கொடியேற்றத்திலிருந்து ஏப்.,5 வரை தொடர்ந்து மாலை 7.30க்கு அம்பாள் கப்பரைச்சட்டி நகரின் முக்கிய வீதிகளில் பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவானம் மகேந்திரன் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !