உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை

காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை

காஞ்சிபுரம் : வல்லக்கோட்டை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும்  ஆடிக்கிருத் திகை விழாவை முன்னிட்டு, நாளை (ஜூலை., 26ல்), காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து, கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்குட்பட்டது, வல்லக்கோட்டை  சுப்ர மணிய சுவாமி கோவில். ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழா, இங்கு,  வெகு விமரிசை யாக நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில், 26ம் தேதி  நடைபெற உள்ள ஆடிக்கிருத்திகை விழாவும், வெகு விமரிசையாக நடத்த,  கோவில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான  பக்தர்கள் வருவர். இதனால், நாளை (ஜூலை., 26ல்),, நடைபெறும் ஆடி கிருத் திகை விழாவிற்கு,  காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து, கலெக்டர்  பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

இந்த உள்ளூர் விடுமுறை நாளை (ஜூலை., 26ல்), ஈடு செய்ய, செப்டம்பர் மாதம் 14ம் தேதி, சனிக்கிழமையன்று, அரசு அலுவலகங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !