பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆக., 7 ல் ஆடி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
பரமக்குடி : ஆண்டு தோறும் ஆடி பிரம்மோற்ஸவ விழா 10 நாட்கள் நடப்பது வழக்கம். இதன்படி ஆக., 7 காலை 9:30 மணி முதல் 10:15 மணிக்குள் கோயில் கொடிமரத்தில் கருடக் கொடி ஏற்றப்படும். அன்று இரவு அன்ன வாகனத்தில் மோகினி அலங்காரத்துடன் பெருமாள் வீதிவலம் வருவார்.
தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பெருமாள் சிம்ம, சேஷ, கருட, ஹனுமன் வாகனங் களில் வீதிவலம் வருவார். ஆக., 12 மாலை 6:00 மணிக்கு மேல் பெருமாள் யானை வாகனத் தில் எழுந்தருளி, ஆண்டாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடக்கிறது.மறுநாள் பூப்பல்லக்கிலும், ஆக., 14 காலை தவழும் கண்ணனாக முத்துப்பல்லக்கில் வீதிவலம் வருவார். இரவு குதிரை வாகனத்திலும், மறுநாள்(ஆக.,15) காலை 9:30 மணிக்கு மேல் 10:15 க்குள் ஆடி தேரோட்டம் ரத வீதிகளில் நடக்கிறது.
இரவு சயன கோலத்தில் பட்டுப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளுகிறார். ஆக., 16 ல் காலை தீர்த்தவாரியும், இரவு சந்நதி கருடனுக்கு சிறப்பு அபிஷேகம் நிறைவடைந்து, கொடியிறக் கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.