/
கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் அருகே கோவிந்த கிருஷ்ண பெருமாள் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு
ராமநாதபுரம் அருகே கோவிந்த கிருஷ்ண பெருமாள் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு
ADDED :2284 days ago
ராமநாதபுரம் : கிராமத்தில் கோவிந்த கிருஷ்ண பெருமாள் கோயில் உள்ளது. தற்போது கோயில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. கோயில் பகுதியில் மரங்கள் மற்றும் கொட்டகை அமைத்து தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் கும்பாபிஷேக யாகசாலை அமைக்க முடியாத நிலை உள்ளது.
எனவே ஆக்கிரமிப்பு மரங்களையும், கொட்டகைகளையும் அகற்றி கோயிலை பாதுகாக்க வேண்டும். ஆனால் கோயில் பகுதியில் விதிமீறி பொது இடத்திற்கு பட்டா பெற தனி நபர்கள் முயற்சிக்கின்றனர். அதை தடுக்க வேண்டும், என்றனர்.