உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூர உற்ஸவம்

திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூர உற்ஸவம்

திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில்  திருவாடிப்பூ உற்ஸவம் ஜூலை 26ல் துவங்குகிறது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆடி மாதத்தில் ஆண்டாள்  பூர நட்சத் திரத்தில் அவதரித்த நாளை முன்னிட்டு 11 நாட்கள் இந்த ஆடிப்பூர  உற்ஸவம் நடைபெறும். இன்று மாலை 6:00 மணிக்கு மேல் அங்குரார்ப்பணமும்,  சேனை முதல்வர் புறப்பாடும் நடை பெறும். ஜூலை 26 ல் காலை 7:12 மணிக்கு  மேல் ஆண்டாள், பெருமாள் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளுகின்றனர்.

காலை 9:45 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து உற்ஸவம்  துவங்கும். இரவு 8:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் ஆண்டாளும்,பெருமாளும்  திருவீதி புறப்பாடு நடை பெறும். ஆக.,1ல் காலையில் அலங்கார திருமஞ்சனமும்,  மாலை சூர்ணாபிஷேகமும், தொடர்ந்து திருவீதி புறப்பாடும் நடைபெறும். ஆக.  4ல் காலை 8:16 மணிக்கு மேல் ஆண்டாளும். பெருமாளும் தேரில் எழுந்தருளுவர்.  மாலை 4:06 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கும். மறுநாள்  காலை திருப்பாற்கடலில் தீர்த்தவாரியும், இரவில் தங்கப் பல்லக்கில் ஆஸ்தானம்  எழுந்தருளலும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !