சதுரகிரி கோயிலுக்கு மளிகை பொருட்கள்
வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயிலின் சார்பில் அன்னதானம் வழங்கிட சென்னையை சேர்ந்த சதுரகிரி பக்தர்கள் 200 மூடை அரிசி மற்றும் மளிகை பொருட்களை அனுப்பி உள்ளனர்.
சதுரகிரி மலையில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையிலும், தனியார் அன்னதான மடங்கள் மூடபட்டுள்ளதாலும் சதுரகிரி வரும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீருக்கு பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. ஆடிஅமாவாசை விழா வரும் பக்தர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்க நன்கொடையாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத் திருந்தது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த திருவள்ளுவன், கணேஷ்குமார், ஸ்ரீசுகன், சரவணகுமார் ஆகியோர் லாரி மூலம் 25 கிலோ பைகள் வீதம் 200 மூடை அரிசி, துவரம்பருப்பு, புளி, உப்பு உட்பட 283 பொருட்களை மூடை கணக்கில் கோயிலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தாணிப்பாறை மலையடிவாரம் திருக்கோயில் முகாம் அலுவலகத்திற்கு வந்த பொருட்களை தொழிலாளர்கள் இறக்கி வைத்தனர். பொருட்களை அனுப்பிய பக்தர்களுக்கு கோயில் செயல் அலுவலர் சிவராமசூரியன் நன்றி தெரிவித்தார்.