உடுமலை காமாட்சியம்மன் கோவிலில், ஆடி மாத சிறப்பு பூஜை
ADDED :2285 days ago
உடுமலை: உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், நாளை 26ம் தேதி , துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஹோமம் நடக்கிறது.
ஆக., 2ம் தேதி கோ-பூஜை, லட்சார்ச்சனை நடக்கிறது. ஆடிப்பெருக்கு தினமான ஆக., 3ம் தேதி அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரத்துடன், திருஆடிப்பூரம் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஆக., 6ம் தேதி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜையும் நடக்கிறது. ஆக.,9ம் தேதி திருவிளக்கு பூஜையும், 16ம் தேதி 108 தம்பதிகள் பங்கேற்கும் தம்பதி பூஜை நடக்கிறது.