கன்னிவாடி அருகே குருபூஜை விழா
ADDED :2283 days ago
கன்னிவாடி : மேலத்திப்பம்பட்டி, வெல்லம்பட்டி மணி சித்தர் பீடங்களில், குருபூஜை நடந்தது. கசவனம்பட்டி அருகே மேலத்திப்பம்பட்டி மணி சித்தர் பீடத்தில் இரண்டாமாண்டு குருபூஜை விழா நடந்தது.
ஜூலை 23 முதல், தினமும் தேவார, திருவாசக பாராயணம் நடந்தது. நேற்று, (ஜூலை., 24ல்) குருபூஜையும், சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம் நடந்தது. வெல்லம்பட்டி மணி சித்தர் பீடத்தில், திருவாசக முற்றோதலுடன் துவங்கியது. கடந்த 3 நாட்களாக, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நேற்று (ஜூலை., 24ல்) மகேஸ்வர பூஜை, குரு பூஜை, மகா தீபாராதனை, ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.