கரூர் வெண்ணைமலை முருகன் கோவிலில் 27ல் ஆடி கிருத்திகை
ADDED :2282 days ago
கரூர்: கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும், 27ல், ஆடி கிருத்தி கை திருவிழா நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு கரூர், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் பால் குடம், பால் காவடிகளை ஊர்வலமாக எடுத்து செல்வர். தொடர்ந்து காலை, 11:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் சங்கரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.