திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றம்
ADDED :2294 days ago
திருவாடானை : திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றம் நேற்று காலை 9:30 மணிக்கு நடந்தது.
முன்னதாக சிநேகவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. அதன் பின் சிவாச்சாரியார்கள்வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. தேவஸ்தான செயல் அலுவலர் புவனேஸ்குமார் மற்றும் கிராம நாட்டார்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆக.2ல் தேரோட்டமும், மறுநாள் தீர்த்தோற்ஸவம், யாக கும்பாபிஷேகம் நடக்கிறது.ஆக., 4 ல் அம்பாள் தவசும், மறுநாள் திருக்கல்யாணமும், 7 ல் சுந்தரர் கயிலாய காட்சியும் நடைபெறும். தினமும் இரவு 8:00 மணிக்கு சிநேகவல்லிஅம்மன் வீதி உலா நடைபெறும்.