உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் காணிக்கை ரூ. 2.16 லட்சம்

மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் காணிக்கை ரூ. 2.16 லட்சம்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் வழங்கும் அன்னதான உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். இத்தொகை யின் மூலம் அனுதினமும் கோவிலில், அன்னதானம் வழங்கப்படுகிறது. நேற்று (ஜூலை., 25ல்) மதியம் கோவில் வளாகத்தில் அன்னதான உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடந்தன. கோவில் உதவி கமிஷனர் ஹர்சினி மற்றும் கோவில் ஆய்வாளர் சரண்யா ஆகியோர் முன்னிலையில், கோவில் ஊழியர்கள், பக்தர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், இரண்டு லட்சத்து, 16 ஆயிரத்து, இரண்டு ரூபாய் பக்தர்கள் காணிக்கை இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !