அந்தியூர் கோவிலில் கிடா வெட்டும் நிகழ்ச்சி
ADDED :4960 days ago
அந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.அந்தியூர் செல்லீஸ்வரர் வகையறாவுக்குட்பட்ட பத்ரகாளிம்மன் கோவில் குண்டம் திருவிழா, அடுத்த மாதம் 4ம் தேதி நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. அந்தியூர் அரசு மருத்துவமனை அருகிலிருந்து நடந்த அம்மை அழைக்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன், கிடா வெட்ட அம்மன் வாக்கு கொடுத்தது. அதன்பின், நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் முகமைதாரர் எருமை கிடாவை வெட்டினார். இதை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "காளி பத்ரகாளி என கோஷமிட்டனர். நேர்த்திக்கடன் செலுத்திய, 50க்கும் மேற்பட்ட எருமை கிடாக்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.