பத்ரகாளியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை
ADDED :4960 days ago
ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது.இக்கோவிலில் நிரந்தரமாக மூன்று உண்டியலும், குண்டம் திருவிழாவின் போது வைக்கப்பட்ட நான்கு உண்டியலும் சேர்த்து, ஏழு உண்டியல்கள் உள்ளன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அறநிலையத்துறை உதவி ஆணையர் தனபால் தலைமையில் நடந்தது. 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.நிரந்தர உண்டியல்களில், ஆறு லட்சத்து 3,120 ரூபாயும், குண்டம் திருவிழாவுக்கு வைக்கப்பட்ட ஏழு உண்டியல்களில், 47 ஆயிரத்து 436 ரூபாயும் இருந்தது. பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்திய, 113 கிராம் தங்கம், 437 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியலில் இருந்தது. அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயமணி, கோவில் பரம்பரை அறங்காவலர் தங்காயம்மாள் உள்பட பலர் உடனிருந்தனர்.