பட்டத்தரசியம்மன் கோவிலில் யுகாதி விழா
ADDED :4960 days ago
உடுமலை : பூளவாடி பட்டத்தரசியம்மன் கோவிலில்பங்குனி யுகாதி திருவிழா நடந்தது.உடுமலை அருகே பூளவாடியில் பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இங்கு யுகாதி விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் பூளவாடி அங்காளம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் இரவு 7.00 மணிக்கு மகா கணபதி யாகமும் நடந்தன. நேற்று மாவிளக்கு பூஜையும், மதியம் 12.00 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. இவ்விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.