தில்லைக்காளி கோவிலில் அர்த்தஜாம பூஜை
ADDED :4959 days ago
சிதம்பரம் : சிதம்பரத்தில் தில்லைக்காளி கோவிலில் மகா அபிஷேகம் மற்றும் ஆர்த்தஜாம பூஜை நடந்தது. தில்லைக்காளி கோவிலில் 129வது மாத அர்த்தஜாம பூஜை நடந்தது. காளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம், தைலக்காப்பு, குங்குமக்காப்பு ஆகியவை செய்யப்பட்டு வெண்பட்டு சாற்றி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும் ஸ்ரீ விநாயகர், தில்லையம்மன் சன்னதிகளில் நெய்தீப ஆராதனை வழிபாடு நடந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக இணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செந்தில்குமார் தலைமை தாங்கினார். பொறியியல் புல பேராசிரியர் கார்த்திகேயன், சரவணன், சின்னையன் முன்னிலை வகித்தனர். துணை பதிவாளர் சுந்தரேசன், சீனியர் கண்காணிப்பாளர் வைத்தியநாதசாமி வரவேற்றார். விழாவை சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற துணைப் பதிவாளர் ராமமூர்த்தி, பப்லு மோகன், சண்முகபிரபு உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.