மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா
திருப்புவனம்:திருப்புவனம் முத்துமாரியம்மன்,ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழாநேற்று நடந்தது.அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வேண்டுதல் நிறைவேற, நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, பொம்மை, பாதம் எடுத்தனர். சிறுவர்கள் கரும்புள்ளி, செம்புள்ளி அணிந்தும், அங்க பிரதட்சணம் செய்தனர்.பிள்ளைபேறு கிடைக்கப்பெற்றவர்கள் கரும்பில் தொட்டில் கட்டி வேண்டுதல் நிறைவேற்றினர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று பால்குடம்,தீச்சட்டி,பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. வைகை ஆற்றிலிருந்து பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம்,எடுத்து வந்துகோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கினர்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.