உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர்காமம் கோவிலில் இன்று 108 பால்குட அபிஷேகம்

கதிர்காமம் கோவிலில் இன்று 108 பால்குட அபிஷேகம்

 புதுச்சேரி:கதிர்காமம் கெங்கையம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி, 108 பால்குட அபிஷேகம் இன்று (28 ம் தேதி) நடக்கிறது. கதிர்காமம் கதிர்வேல் சுவாமி தேவஸ்தானத்தின், கெங்கை அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி 108 பால்குட அபிஷேகம்  மற்றும் பொன் ஊஞ்சல் நிகழ்ச்சிஇன்று (28 ம் தேதி) நடக்கிறது.காலை 7:00 மணிக்கு யாக பூஜைகள் துவங்குகிறது. காலை 8:00 மணிக்கு கதிர்வேல் சுவாமி கோவிலில் இருந்து 108 பால்குடம் புறப்பட்டு, மாட வீதி வலம் வருகிறது. காலை 9:00 மணிக்கு  கெங்கையம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடக்கிறது.இரவு 6:00 மணிக்கு கெங்கையம்மனுக்கு பொன் ஊஞ்சல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !