உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பம்மல் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

பம்மல் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

 சென்னை: பம்மல், மூங்கில்நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவின் தொடர்ச்சியாக, இன்று, கூழ் வார்க்கும் வைபவமும், வீதி உலாவும் நடைபெற உள்ளது.பம்மல், அண்ணாநகர் பகுதியில் உள்ள மூங்கில் நகரில், முத்துமாரியம்மன் கோவில்  உள்ளது. இங்கு, ஆடி திருவிழா நடந்து வருகிறது. இம்மாதம், 24ம் தேதி, பந்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கிய இந்த விழாவில், 26ம் தேதி, கணபதி ஹோமம், சொற்பொழிவு, காப்பு கட்டும் விழா, விளக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள், சிறப்பாக நடந்தன.தொடர்ந்து, நேற்று,  சக்தி கரகத்தின் வீதி உலாவும், இசை நிகழ்ச்சியும் நடந்தன. இன்று காலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கும் திருவிழாவின் சிறப்பம்சமாக, மதியம், 12:00 மணிக்கு, அம்மனுக்கு கூழ் வார்க்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.தொடர்ந்து, பக்தர்களுக்கு,  அன்னதானம் வழங்கப்படும். இரவு, 7:00 மணிக்கு, அம்மன், சிம்ம வாகனத்தில், வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.இதற்கான ஏற்பாடுகளை, முத்துமாரியம்மன் பக்த ஜன சபா செய்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !