வத்திராயிருப்பு கோயிலில் சிறப்பு திருமஞ்சனம்
ADDED :2268 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: வத்திராயிருப்பு அர்ச்சனாபுரம் அழகிய மணவாள பெருமாள் கோயிலில் சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கோயில் மைய மண்டபத்தில் பூரணகும்ப வழிபாடு நடத்தி, மூலவர் மற்றும் பத்மாவதி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பஜனை செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சேதுநாராயணபெருமாள் கோயில் சேவாசமிதி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.