உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாஸ்தா கோயிலில் ஆடி கொடை விழா

சாஸ்தா கோயிலில் ஆடி கொடை விழா

ராஜபாளையம்: ராஜபாளையம்  சடைஉடையார் சாஸ்தா கோயிலில் ஆடி கொடை விழா  நடந்தது.

ராஜபாளையம் முகில்வண்ணன் பிள்ளை தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சடை உடையார் சாஸ்தா திருக்கோயிலில் ஆடி கொடை விழாவை முன்னிட்டு காலையில் பால் குடங்கள் விநாயகர் கோயிலில் இருந்து முக்கிய வீதி வழியாக உலா வந்து கோவிலை வந்தடைந்தது. பின்பு மூலவர் சடையார் சாஸ்தா, பூர்ணா, புன்னைவனத்தாய் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் 18 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு மாலையில் சிறப்பு பூஜைகளும் மற்றும் இரவு சங்கிலி மாடசாமி சுடலைமாட  சுவாமிகளுக்கு சிறப்பு படையல் பூஜையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக் கமிட்டியார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !