பழநியில் ரோப்கார் நிறுத்தம்
ADDED :2268 days ago
பழநி : பழநி முருகன் கோயிலுக்கு நேற்று ஞாயிறு விடுமுறை நாளில் அதிகாலை முதல் மலைக்கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். பலத்த காற்று காரணமாக ரோப்கார் அடிக்கடி நிறுத்தப்பட்டு இயங்கியது. இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் வின்ச்சில் செல்வதற்கு 2 மணிநேரம் காத்திருந்து சிரமப்பட்டனர். பொது தரிசனவழியில் 2 மணி நேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இரவு தங்கரதப் புறப்பாட்டில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் இன்று (ஜூலை.29) முதல் 45 நாட்கள் நிறுத்தப்படுகிறது. பக்தர்கள் வின்ச், படி, யானைப்பாதையை பயன்படுத்தும்மாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.