திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :2267 days ago
கச்சிராயபாளையம்: அம்மாபேட்டை திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. கோவில் தேரோட்டம் கடந்த 20ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.பால்குட ஊர்வலம், சாகை வார்த்தல், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தது.முக்கிய நிகழ்வான அர்ஜூணன் மாடு திருப்புதல் மற்றும் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 4 மணியளவில் நடந்த தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.