ஐயப்பன் கோவிலில் ஆடி திருவிளக்கு வழிபாடு
ADDED :2267 days ago
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ஐயப்பன் திருக்கோவிலில் ஆக., 2ம் தேதி ஐயப்பன் ஆடி திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது.பெரியநாயக்கன்பாளையம் வெங்கடேசலு நகரில் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆக., 2ம் தேதி ஆறாம் ஆண்டு ஆடி திருவிளக்கு வழிபாடு மாலை, 6.00 மணிக்கு நடக்கிறது. திருவிளக்கு வழிபாட்டை நரசிம்ம நாயக்கன்பாளையம் ஆன்மிக சொற்பொழிவாளர் பானு அம்மையார் நடத்தி வைக்கிறார். திருவிளக்கு வழிபாட்டில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் குத்துவிளக்குடன் வர வேண்டும். மேலும், விபரங்களுக்கு, கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.