பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா
ADDED :2265 days ago
சேலம்: ஆடிப்பூர திருவிழாவையொட்டி, ஆக., 4ல், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கவுள்ளது. சேலம், பட்டைக்கோவில், வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த, 24ல், ஆடிப்பூர திருவிழா தொடங்கியது. 10 நாள் நடக்கும் விழாவில், தினமும் மாலை, ஆண்டாள் நாச்சியார், வரதராஜருடன், விதவித அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். ஆண்டாள் அவதரித்த நாளான ஆடிப்பூரம், ஆக., 3ல் வருகிறது. அன்று, ஆண்டாள், வரதராஜருடன் சேர்த்தி சேவையில் அருள்பாலிக்கவுள்ளார். அடுத்தநாள் காலை, 10:00 மணிக்கு, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அத்துடன், திருவிழா நிறைவடையும்.