வரதராஜ பெருமாள் கோவிலில் அகண்ட திவ்ய நாம பஜனை
புதுச்சேரி : புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில், 56ம் ஆண்டு, 24 மணி நேர அகண்ட திவ்ய நாம பஜனை நடந்தது.
வைத்திக்குப்பம், ஸ்ரீ வேங்கடாசலபதி பஜனைக் கூடம் சார்பில், புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு, உலக அமைதி வேண்டி, 56ம் ஆண்டு, 24 மணி நேர அகண்ட திவ்ய நாம பஜனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதன்படி, பஜனை நிகழ்ச்சி நேற்று முன்தினம் (28ம் தேதி) காலை 6:00 மணிக்கு துவங்கியது. ஆடிட்டர் கணேசன், வேதபாரதி தலைவர் ரமஷே் ஆகியோர் தலைமையில் பஜனைகள் நடந்தது.நேற்று (29ம் தேதி) காலை 6:00 மணி வரை, நடைபெறும் இந்த பஜனையில், வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனை குழுவினர், பிள்ளைத்தோட்டம் கண்ணபிரான் நாமசங்கீர்த்தன கைங்கர்ய சபா, குருஜி முரளிதர ஸ்வாமிகள் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை வேங்கடாசலபதி பஜனை கூடத்தினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.