உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லையசுவாமி கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை

மல்லையசுவாமி கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை

போடி : போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நகை அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

பிரசாதம் வழங்கப்பட்டது. போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் அமைந்துள்ள கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரங்களை போடி ஜமீன்பரம்பரையை சேர்ந்த பாண்டி சுந்தரபாண்டியன் செய்திருந்தார். போடி பரமசிவன் கோயிலில் சிறப்பு பூஜை அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. மேலச்சொக்கநாதர் கோயில், போடி சுப்பிரமணியர் கோயில், வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !