திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்ஸவம்
பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், திருபவித்ரோத்ஸவம் நடந்தது.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்ஸவம், கடந்த 27ம் தேதி காலை 9:00 மணிக்கு, பகவத் பிரார்த்தனையுடன் துவங்கியது.
நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம், பெருமாள், தாயார், நரசிம்ம பெருமாளுக்கு பவித்ரம் சாற்றுதல், பகல் 12:00 மணிக்கு பூர்ணாஹூதி நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு 108 அஷ்டோத்ர கலச திருமஞ்சனம், திருகுளத்தில் தீர்த்தவாரி, பகல் 12:00 மணிக்கு வேதபிரபந்த சாற்றுமுறை நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் பூவங்கி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் அருள் பாலிக்கிறார்.