திண்டுக்கல் ஜெருசலேம் புனித பயணம்
திண்டுக்கல் : கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள அனைத்து பிரிவினர் களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள், 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் செல்ல விரும்புவோர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். இப்புனித பயணம் பெத்லகேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலியோ கடல் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய புனித தலங்களை உள்ளடக்கியது. நடப்பாண்டு அக்டோபர் முதல் அடுத்தாண்டு மார்ச் வரை இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.
பயண காலம் 10 நாட்கள்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைப்புகளுடன் ’கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான 2019- 20” என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமகால், பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற முகவரிக்கு ஆக.30-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 044 -2852 0033 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.