ஒரே இடத்தில் ஒன்பது துர்கை!
ADDED :2361 days ago
கோயிலில் கோஷ்ட தெய்வமாக துர்க்கை சன்னதி இருக்கும். ஆனால் ஒன்பது துர்கையை ஒரே இடத்தில் தரிசிக்க விரும்பினால் சென்னை மாம்பலம் வாழைத்தோப்பு இளங்காளியம்மன் கோயிலுக்கு செல்ல வேண்டும். பளிங்கு கற்களால் ஆன சிலைகளாக சாந்தி துர்கை, சபரி துர்கை, ஜ்வாலா துர்கை, ஜெயதுர்கை, ஆசூரி துர்கை, மூல துர்கை, தனதுர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை என்ற பெயர்களில் ஒரே மண்டபத்தில் காட்சியளிக்கின்றனர்.