மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மீன பரணி தீபம் கோலாகலம்!
குளச்சல் : பரணிக்கொடை விழாவை முன்னிட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நேற்று நள்ளிரவு வலியப் படுக்கை மஹாபூஜை நடந்தது. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண் டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மீனபரணி தினம் நேற்று கோலாகலமாக நடந் தது. மாசிப்பெரும் கொடை விழாவின் ஆறாம் நாளான வெள்ளிக்கிழமை, கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமை மற்றும் மீனபரணி ஆகிய மூன்று தினங்களும் அம்மனுக்கு வலியப்படுக்கை எனும் மஹாபூஜை நடத்தப் படுகிறது. நேற்று மீனபரணிவிழாவை முன்னிட்டு புஷ்பாபிஷேகம், அத்தாளபூஜை, சிறப்பு தீபாரா தனை, அம்மன் வெள்ளிப்பல் லக்கில் வீதிஉலா வருதல் உள் ளிட்டவை நடந்தது. நள்ளிரவு 12 மணிமுதல் ஒருமணிக்குள் வலியப்படுக்கைஎனும் மஹாபூஜை நடந்ததுது. இப் பூஜையில் அம்மனுக்கு காய் கனிகள், உணவுப்பதார்த்தங்கள் உள்ளிட்டவை பெரும் குவி யலாக படைத்து வைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இப் பூஜையில் ஏராளமான பக்தர் கள் கலந்துகொண்டனர். வலி யப்படுக்கை பிரசாதம் பக்தர் களுக்கு இன்று காலை வழங் கப்படுகிறது. பரணிக் கொடை விழாவை முன்னிட்டு கேரள மாநிலம் உள்ளிட்ட பலபகுதிக ளிலிலிருந்தும் பக்தர்கள் நேற்று மண் டைக்காடு வந்து அம்மனை தரிசித்து பொங்கல் வழிபாடு நடத்தினர்.