உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.

இன்று (ஜூலை 31) ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை, சுவாமி அம்பாளுக்கு காலபூஜைகள் நடந்தது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா ஜூலை 25ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 7 ம் நாள் ஆடித் திருவிழாவான இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9:10 மணிக்கு கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் புறப்பாடாகி வீதி உலா வருவார். பின்னர் காலை 10:30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ராமர் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி, பக்தருக்கு தீர்த்த வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று இரவு 10:00 மணி முதல் ராமேஸ்வரம் கோயிலுக்கு ரயில், பஸ்கள் மூலம் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டஷேன், அக்னி தீர்த்த கரை, பஸ் ஸ்டாண்டில் ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !