உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ. 4.22 கோடி

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ. 4.22 கோடி

திருப்பதி :திருமலை ஏழுமலையான் கோவிலில், உண்டியல் காணிக்கையாக, நேற்று ஒரே நாளில், 4.22 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், தரிசனம் முடித்த பின், வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு, உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகளை தேவஸ்தானம், தினசரி கணக்கிட்டு, வங்கியில் வரவு வைக்கிறது. தினசரி சராசரியாக, 2.50 கோடி ரூபாய் முதல், 3.50 கோடி ரூபாய் வரை, உண்டியல் வருவாய் கிடைக்கிறது. ஆனால், ஒரு சில நாட்களில், உண்டியல் காணிக்கை, நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகி வருகிறது. அதன்படி நேற்று, பக்தர்கள் உண்டியலில் செலுத்திய வருமானத்தை கணக்கிட்டதில், அது, 4.22 கோடி ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !