உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் 153வது உழவாரப்பணி

நெல்லையப்பர் கோயிலில் 153வது உழவாரப்பணி

திருநெல்வேலி : நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் பக்தர் பேரவை சார்பில் நெல்லையப்பர் கோயிலில் 153வது உழவாரப்பணி நடந்தது. ஹிந்து ஆலயப் பாதுகாப்புக்குழுவின் நெல்லையப்பர் காந்திமதி அம்பாளர் பக்தர் பேரவை சார்பில் ஒவ்வொரு மாதமும் 4வது ஞாயிற்றுக் கிழமைகளில் உழவாரப்பணி நடந்துவருகிறது. 153வது உழவாரப்பணியான நேற்று ஆறுமுக நயினார் சன்னதி முன்பிருந்து உழவாரப்பணி துவங்கியது. கோயில் பிரகாரம், உட்பகுதிகளில் தேங்கிய குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டன. சுவர்களில் முளைத்திருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன. கோயில் பகுதி முழுவதையும் சுத்தம் செய்து தண்ணீரால் கழுவினர். கோயில் பூஜை பாத்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் பக்தர் பேரவையை சேர்ந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் ஆர்வமுடன் திரளாக கலந்து கொண்டனர். உழவாரப்பணியினருக்கு மகேஷ்பாபு அன்னம் வழங்கினார். அமைப்பாளர் குணசீலன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !