அரசாளவந்த அம்மன் கோவில் பால்குட விழா
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அரசூரணி கரையில் அமைந்துள்ள அரசாளவந்த அம்மன் கோவில் விழா ஜூலை 22ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.அதைத் தொடர்ந்து விழாவின் தொடர்ச்சியாக தினமும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முக்கிய விழாவான பால்குட விழா நேற்று காலை 10:30 மணிக்கு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து துவங்கியது. பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசாளவந்த அம்மன் கோவிலை அடைந்தனர்.அதைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்திருந்த பால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் அன்னதானமும், நீர் மோரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை இந்து சமய மன்றத்தினரும், விழா கமிட்டியினரும் செய்திருந்தனர்.