ஊர்காவலன் சாமி கோயில் திருவிழா: பக்தர்கள் பால்குடம்
ADDED :2263 days ago
திருப்புவனம்: திருப்புவனம் அருகே வில்லியாரேந்தல் ஊர்காவலன் சாமி கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது.
வில்லியாரேந்தலில் வருடம் தோறும் ஆடியில் ஊர்காவலன் சாமிக்கு காப்பு கட்டி பத்து நாட்கள் விரதமிருந்து பால் குட ஊர்வலம் நடத்துவது வழக்கம், இந்தாண்டு ஆடி திருவிழா கடந்த செவ்வாய்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை மதுரை அழகர் கோயிலில் இருந்து தீர்த்தம் ஆடி வந்த பக்தர்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 11:00 மணிக்கு தொடங்கிய பால்குட ஊர்வலம் கிராமத்தை வலம் வந்த பின் நிறைவடைந்தது. மழை பொழியவும்,விவசாயம் செழிக்கவும் நடத்தப்பட்ட இந்த பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து காப்பு கட்டி பங்கேற்றனர். ஊர்காவலன் சாமிக்கு பாலாபிேஷகம் நடத்தப்பட்டது. அன்னதானமும் நடந்தது.