உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டையம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா

கோட்டையம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா

 தேவகோட்டை : தேவகோட்டை கோட்டையம்மன் கோவில் பொங்கல் விழா 22 ந்தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. கோவிலிலிருந்து பிடிமண் எடுத்து வரப்பட்டு கோட்டையம்மன் ஆவாகனம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு எதிரேயுள்ள பீடத்திற்கு தினமும் காலை மாலை இரு நேரமும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரண்டாம் செவ்வாயான நேற்று கோவிலில் பொங்கல் விழா நடந்தது.கோவிலை சுற்றி 2 ஆயிரம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று முதல் அம்மனுக்கு வெவ்வேறு அலங்காரம், விளக்கு பூஜை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !