உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆடிமுளைக்கொட்டு விழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆடிமுளைக்கொட்டு விழா கொடியேற்றம்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னதி முன் உள்ள கொடி மரத்தில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றம் நாளை (ஆக., 1) காலை 10:30 முதல் 11:30 மணிக்குள் நடக்கிறது.

ஆடிப்பட்டம் தேடி விதை என்ற ஆன்றோர் வாக்கின்படி விவசாயிகள் ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்வர். தங்கள் நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு மட்டும் உரிய திருவிழாக்கள் ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்ஸவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு ஆகியவை.ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றம் நாளை நடக்கிறது.

மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் நாளை ஜூலை., 30ல் முதல் ஆக., 10 வரை தினமும் காலை, மாலையில் ஆடி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருவார். ஆக.,7 ல் இரவு திருவீதி உலா முடிந்த பின் உற்ஸவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !